சேலம் 33-வது வார்டு தம்பி காளியம்மன் கோவில் தெருவில் சாலையில் குப்பைகள் கொட்டப்படுகிறது. இந்த குப்பைகள் முறையாக அகற்றப்படுவது இல்லை. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே இந்த குப்பைகளை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-விஸ்வநாதன், சேலம்.