தஞ்சையில் இருந்து விளார் செல்லும் சாலை உள்ளது. விளார் பகுதியில் இருந்து இந்த சாலையின் வழியாக தினமும் ஏராளமானோர் தஞ்சைக்கும் தஞ்சையில் இருந்து விளார்பகுதிக்கும் சென்று வருகின்றனர். இந்தநிலையில் அங்காளஈஸ்வரி கோவில் அருகே சாலையோரத்தில் குப்பைகளை கொட்டி வருகின்றனர். மேலும் அங்கு வைக்கப்பட்டிருந்த ஒரு குப்பைத்தொட்டியும் சேதமடைந்து கிடக்கிறது. இதனால் குவிந்து கிடக்கும் குப்பைகளில் இரை தேடி கால்நடைகள், நாய்கள் அதிகளவில் வரத்தொடங்கியுள்ளன. இதன் காரணமாக வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும், குப்பைகளால் மேற்கண்ட பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையோரத்தில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுப்பார்களா?