சுகாதார கேடு

Update: 2022-11-20 16:20 GMT

சேலம் மாவட்டம் வாழப்பாடியில் கோட்டப்பட்டி சாலையில் தினந்தோறும் குப்பைகளை கொட்டி எரிக்கின்றனர். இதனால் அந்த வழியே செல்லும் பொது மக்கள் மூச்சு திணறலால் அவதியடைகின்றனர். அப்பகுதியில் சுகாதார கேடும் ஏற்படுகிறது. இதுகுறித்து பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இந்த பகுதியில் குப்பைகள் எரிக்கப்படுவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- ராஜா, வாழப்பாடி, சேலம்.

மேலும் செய்திகள்