செடி, கொடிகள் அகற்றப்படுமா?

Update: 2022-07-15 16:38 GMT

தர்மபுரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அடுத்த சந்தாபுரம் ஊராட்சி 4-வது வார்டுக்கு உட்பட்ட தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் குடியிருப்பு பகுதி, தெருக்கள், விளையாட்டு மைதானம், மசூதி சுற்றி செடி, கொடிகள் வளர்ந்து புதர்போல் காட்சி அளிக்கிறது. இதனால் விஷப்பூச்சிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. மேலும் குப்பைகளும், கழிவு நீர்யும் தேங்கி நிற்கிறது. சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுத்து அந்த பகுதியை தூய்மையாக வைக்க செய்ய வேண்டும்.

-மகேந்திரன், சந்தாபுரம், தர்மபுரி.

மேலும் செய்திகள்