சுகாதார சீர்கேடு

Update: 2025-11-16 07:27 GMT

 சுந்தரபுரத்தில் இருந்து பொட்டல் குளத்துக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் இருந்து ஒரு பிரிவு சாலை வளநகர் செல்கிறது. இந்த சாலையின் ஓரங்களில் பல இடங்களில் குவியல்களாக கழிவுகளை கொட்டி வைத்து தீ வைத்து கொளுத்துகிறார்கள். இதனால் அந்த பகுதி முழுவதும் புகைமண்டலம் காணப்படுவதும் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. மேலும், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பொதுமக்கள் நலன்கருதி சாலையோரத்தில் குப்பைகளை கொட்டி தீவைப்பதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராம்தாஸ், சந்தையடி.

மேலும் செய்திகள்