உப்பள்ளி டவுன் கசபா ரோட்டில் உள்ள நடைபாதையில் இரவு நேரத்தில் குடியிருப்புவாசிகள் குப்பை கொட்டி வருகின்றனர். இதனால் நடைபாதையில் குப்பை குவிந்து கிடக்கிறது. அந்த குப்பையில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது. தெருநாய்கள் குப்பை கிளறுகின்றன. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு நிலவுகிறது.
குப்பையில் இருந்து உற்பத்தியாகும் கொசுக்களும் நடைபாதையில் செல்பவர்களை கடித்து வருகின்றன. இதனால் மக்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்படுகிறது. நடைபாதையை பாதசாரிகள் பயன்படுத்த முடிவது இல்லை. நடைபாதையில் குப்பை கொட்டுவது தடுக்கப்படுமா?