சுகாதார சீர்கேடு

Update: 2022-09-11 15:10 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பஸ் நிலையத்தில் பேரூராட்சிக்கு சொந்தமான கடைகள் உள்ளன. இந்த கடைகளில் ஓட்டல் நடத்தி வருகின்றனர். சமையல் செய்வதற்காக டன் கணக்கில் மரங்களை வெட்டி விறகுகள் குவியல் குவியலாக கொட்டப்பட்டுள்ளன. இந்த விறகுகளில் பூச்சிகள், பாம்புகள் இருப்பதால் பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள் அச்சப்படுகின்றனர். மேலும் சுகாதார கேடும் ஏற்படுகிறது. எனவே இந்த விறகுகளை அப்புறப்படுத்த அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-நாகராஜ், தேன்கனிக்கோட்டை, கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்