தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே உள்ள குட்லானஅள்ளி கிராமத்தில் தெருநாய்கள் சாலைகளில் சுற்றித்திரிகின்றன. இவை வாகன ஓட்டிகள், குழந்தைகள், பெண்கள், வயதானவர்களை தெருநாய்கள் கடிக்க விரட்டி செல்கின்றன. பொதுமக்கள் சாலையில் செல்ல அச்சப்படுகின்றனர். மேலும் சாலையின் குறுக்கே தெருநாய்கள் திடீரென ஓடிவருவதால் விபத்து ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெருநாய் தொல்லையை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- செந்தில், குட்லானஅள்ளி.