பொதுமக்கள் அவதி

Update: 2026-02-08 12:43 GMT

சென்னை விருகம்பாக்கம் நடேசன் நகர் 4-வது தெருவில் சில வாரங்களுக்கு முன்பு குடிநீர் குழாயில் தண்ணீர் வரவில்லை என்று அதனை சரிசெய்ய பள்ளங்கள் தோண்டப்பட்டது. ஆனால் இன்னும் சரிசெய்யப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் சாலையிலும், வீடுகளின் வாசல்களிலும் பள்ளங்களாக உள்ளது. சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். மேலும் குடிநீரும் வீடுகளுக்கு வரவில்லை. அந்த பகுதி மக்கள் மிகவும் பாதிப்படைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து குடிநீர் கிடைக்கவும் சாலையில் உள்ள பள்ளங்களையும் சரிசெய்யவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

மேலும் செய்திகள்