புகார் எதிரொலி

Update: 2026-02-08 12:50 GMT

திருவள்ளூர் மாவட்டம், சித்திராஜா கண்டிகை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் டி.என்.எச்.பி. குடியிருப்பின் பிரதான சாலையில் கழிவுநீர் கால்வாய் மூடாமல் திறந்த நிலையில் இருந்தது.இதுதொடர்பாக 'தினத்தந்தி' புகார் பெட்டியில் கடந்த வாரம் படத்துடன் செய்தி வெளியானது. சம்பந்தப்பட்ட துறைசார்ந்த அதிகாரிகள் உடனடி நடவடிக்கையாக கழிவுநீர் கால்வாயை சீரமைத்து சரிசெய்தனர். உடனடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், அதற்கு தூண்டுதலாக நின்ற 'தினத்தந்தி' பத்திரிகைக்கும் அப்பகுதி பொதுமக்கள் பாராட்டை தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்