சென்னை, புழல் காவாங்கரையில் உள்ள கண்ணப்ப சாமி தெருவில் சில மாதங்களுக்கு முன்பு ஆங்காங்கே சாலைப்பணிகள் நடைபெற்றது. வேலை முடிந்தும் சில இடங்களில் முறையாக சாலை போடப்படாமல் உள்ளது. இதனால் சாலை மேடுபள்ளம் நிறைந்த காணப்படுகிறது. தெருவில் செல்லும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரிதும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து சாலை அமைத்துதர வேண்டும்.