தெரு நாய் தொல்லை

Update: 2025-09-28 15:39 GMT

நாமக்கல் நகரின் முக்கிய பகுதிகளில் தெருநாய் தொல்லை அதிகமாக உள்ளது. குறிப்பாக பெண்கள், குழந்தைகள் வெளியே வரும்போது அவர்களை கடிக்க துரத்துகின்றன. அவ்வாறு அவர்கள் தப்பி செல்லும்போது தவறி கீழே விழுந்து காயமடைகிறார்கள். மேலும் இரவு நேரங்களில் வேலை முடிந்து வீட்டிற்கு செல்பவர்களை தெருவில் சுற்றித்திரியும் நாய்கள் கடிக்க வருகின்றன. சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் பலனில்லை. எனவே பொதுமக்கள் நலன் கருதி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தெருநாய் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும்.

-ராமசாமி, நாமக்கல்.

மேலும் செய்திகள்