சென்னை அசோக் நகர் 100 அடி சாலையில் உள்ள பஸ் நிறுத்தம் மாம்பலம் செல்லும் பயணிகள் அதிகமாக பயன்படுத்தும் பஸ் நிறுத்தம். இங்கு தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். ஆனால் இந்த பஸ் நிறுத்தத்தில் இருக்கும் இருக்கைகள் சிதலமடைந்து உள்ளது. இதனால் வரும் பயணிகள் உட்கார முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதில் முதியவர்கள் பெரும் அவதிப்படுகின்றனர். எனவே மாநகராட்சி துறை அதிகாரிகள் பஸ் நிறுத்தத்தின் இருக்கையை சரிசெய்து தரவேண்டும் என்று பயணிகள் கோரிக்கை வைக்கின்றனர்.