திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் நாறவாரி குப்பம் பேரூராட்சிக்கு உட்பட்ட எம்.கே. காந்தி தெருவில் அனைத்து வீடுகளுக்கும் மின் இணைப்பு வழங்கப்பட்டது. ஆனால் அந்த பகுதியில் உள்ள சில வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்காமல் அதிகாரிகள் அலைக்கழித்து வருகின்றனர். இந்த ஏழை மக்களின் குடியிருப்புகளுக்கு மின் இணைப்பு வழங்க மின்வாரிய அதிகாரி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.