தெருநாய்கள் தொல்லை

Update: 2025-09-28 15:34 GMT

தர்மபுரி மாவட்டம் பொ.மல்லாபுரம் பேரூராட்சி 15 வார்டுகளில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள பில் பருத்தி, வினோபாஜிதெரு, ஆர்.எம்.நகர் ரோடு, பாரஸ்ட் ரோடு, தர்மபுரி மெயின் ரோடு, ரெயில் நிலையம் ஆகிய பகுதிகளில் தெருநாய்கள் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. தெருக்களில் கூட்டமாக சுற்றும் தெருநாய்களால், அப்பகுதி மக்கள் நடந்து செல்லவே அச்சப்படுகின்றனர். தெருக்களில் வாகனங்களில் செல்வோரை நாய்கள் துரத்துவதால், வாகன ஓட்டிகள் கீழே விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே பொ.மல்லாபுரம் பேரூராட்சியில் தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த, நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-இளையராஜா, பொம்மிடி.

மேலும் செய்திகள்