தெருநாய்கள் தொல்லை

Update: 2025-09-21 10:50 GMT

சேலம் வடக்கு அஸ்தம்பட்டி, சின்னதிருப்பதி, கலெக்டர் அலுவலகம் உள்பட மக்கள் அதிகம் நடமாடும் இடங்களில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இப்பகுதிகளில் சுற்றித்திரியும் தெருநாய்கள் முதியவர்கள், மாணவர்களை துரத்தி சென்று கடிக்கின்றன. இதனால் சிலர் நாய்க்கடியால் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும்.

-மதன், சேலம்.

மேலும் செய்திகள்