தெருநாய்கள் தொல்லை

Update: 2025-09-07 15:32 GMT

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்திற்கு உட்பட்ட இந்திரா நகர், அம்பேத்கர் நகர், கலைமகள் வீதி, வேதாந்தபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இதன் காரணமாக பள்ளி மாணவர்கள், முதியவர்கள், பெண்கள் வீடுகளில் இருந்து வெளியே வர அச்சப்படுகிறார்கள். மேலும் தெருநாய்கள் கூட்டமாக சேர்ந்து இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் மற்றும் நடந்து செல்பவர்களை கடிக்க துரத்துகின்றன. இதன் காரணமாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே அதிகாரிகள் தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜெபராஜ், குமாரபாளையம்.

மேலும் செய்திகள்