தெருநாய்கள் தொல்லை

Update: 2025-09-07 14:22 GMT

கிருஷ்ணகிரி நகரின் முக்கிய தெருக்களில் தெரு நாய்கள் தொல்லை அதிக அளவில் உள்ளது. இதன் காரணமாக பெண்கள், குழந்தைகள் வெளியே வர அச்சப்படுகிறார்கள். மேலும் இரவு நேரங்களில் வேலை முடிந்து வாகனங்களில் வீட்டிற்கு செல்பவர்களை துரத்துகின்றன. அந்த நேரங்களில் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயம் அடைகிறார்கள். இது குறித்து பலமுறை மனு அளித்தும் பலனில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தெருநாய் தொல்ைலயை கட்டுப்படுத்த வேண்டும்.

-ராம், கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்