மயிலாடுதுறை மாவட்டம் அபிசேகக்கட்டளை கிராமத்தில் குரங்கு தொல்லைகள் அதிகமாக உள்ளது. வாழை, தென்னை மரங்களை சேதப்படுத்தி பெரும் நஷ்டத்தை ஏற்படுத்துகிறது. குடியிருப்புக்குள் குரங்குகள் புகுந்து பொருட்களை அள்ளி செல்கின்றன. மேலும் சிறுவர்களை விரட்டி சென்று கடித்து விடுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் குரங்குளை பிடித்து வனத்தில் விட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், மயிலாடுதுறை