வாரச்சந்தை செயல்படுமா?

Update: 2025-04-06 12:33 GMT


மயிலாடுதுறை மாவட்டம், ஆக்கூரை சுற்றி ஏராளமான கிராமங்கள் உள்ளன. வாரம்தோறும் வெள்ளிக்கிழமைகளில் வாரச்சந்தை ஆக்கூர் பஸ் நிலையம் அருகே செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த சில வருடங்களாக செயல்படாமல் உள்ளது. இதனால் ஆக்கூர் மற்றும் இதனை சுற்றியுள்ள கிராம பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீண்டும் வாரச்சந்தை செயல்பட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள்

ஆக்கூர், பொதுமக்கள்

மேலும் செய்திகள்