தஞ்சை-நாஞ்சிகோட்டை சாலை திரு இருதய பேராலயம் அருகே உள்ள வழிகாட்டி பெயர் பலகை சாய்ந்த நிலையில் உள்ளது. இந்த பகுதியில் பள்ளிக்கூடங்கள் உள்ளதால் மாணவ-மாணவிகள் இந்த பகுதியை கடந்து செல்லும்போது அச்சத்துடனேயே செல்கின்றனர்.இது எந்த நேரத்திலும் விழும் நிலையில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாய்ந்த நிலையில் உள்ள வழிகாட்டி பலகையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், தஞ்சாவூர்