மயிலாடுதுறை மாவட்டம், ஆக்கூரில் சிவன் கோவிலுக்கு எதிரே குளம் ஓன்று உள்ளது. இந்த குளம் பலவருடங்களாக தூர்வாரப்படாமல் உள்ளது. மேலும் இக்குளத்தை பயன்படுத்துவதற்கு படிக்கட்டுகள் இருந்தன. தற்போது படிக்கட்டுகள் உடைந்து சேதமடைந்து உள்ளது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், ஆக்கூர்.