தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வட்டம் ரெயில்வே லைன் தென்புறம் உள்ள ராமகிருஷ்ணா நகரில் தெரு நாய்கள் அதிக அளவில் சுற்றித் திரிகின்றன. இதனால் அந்த பகுதி மக்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர், இரு சக்கர வாகனத்தில் செல்வோரை விரட்டி சென்று நாய்கள் கடிக்கின்றன. மேலும் பள்ளிக்குச் செல்லும் மாணவ-மாணவிகள், குழந்தைகள் முதியவர்களை விரட்டிச்சென்று கடித்து விடுகின்றன.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தெருநாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
பொதுமக்கள், கும்பகோணம்.