காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் படப்பை ஊராட்சி ஆத்தனஞ்சேரி காலனி, காந்தி தெருவில் விநாயகர் கோவில் அருகே உள்ள மின்கம்பம் சேதமடைந்து அதன் சிமெண்டு பெயர்ந்து கீழே விழும் நிலையில் உள்ளது. இதனால் கோவிலுக்கு வரும் மக்கள் அச்சத்துடனே செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து மின்கம்பத்தை சரிசெய்து தரவேண்டி அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.