திருவள்ளூர் மாவட்டம் புட்லூர் கிராமத்தில் ஏராளமான மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அந்த கிராமத்தில் உள்ள ரேஷன்கடை மிகவும் சேதமடைந்து உள்ளது. ரேஷன் கடையின் சுவர்கள் பெயர்ந்து விழுகின்றன. இதனால் பொருட்கள் வாங்க ரேஷன் கடைக்கு வரும் மக்கள் அச்சத்துடேன வந்து செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ரேஷன் கடையை சீரமைக்க வேண்டும்.