கோத்தகிரி நகர் பகுதியில் பொதுமக்கள் பாதுகாப்பாக நடந்து செல்ல நடைபாதைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த நடைபாதைகளில் வியாபாரிகள் பொருட்களை வைத்து ஆக்கிரமித்துள்ளதுடன், வாகனங்களும் தாறுமாறாக நிறுத்தப்படுகின்றன. இதனால் பொதுமக்கள் நடந்து செல்ல இடையூறு ஏற்படுவதால் ஆக்கிரமிப்பை அகற்றி, வாகனங்கள் நிறுத்தப்படுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.