சென்னை அசோக் நகர் 100 அடி சாலையில் உள்ள பஸ் நிறுத்தத்தில் இருக்கைகள் சிதலமடைந்து பயணிகள் உட்கார முடியாத நிலையில் இருந்தது. இதுதொடர்பாக 'தினத்தந்தி' புகார் பெட்டியில் கடந்த வாரம் படத்துடன் செய்தி வெளியானது. சம்பந்தப்பட்ட துறைசார்ந்த அதிகாரிகள் உடனடி நடவடிக்கையாக பஸ் நிறுத்தத்தின் இருக்கைகளை சீரமைத்தனர். உடனடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், அதற்கு தூண்டுதலாக நின்ற 'தினத்தந்தி' பத்திரிகைக்கும் அப்பகுதி பொதுமக்கள் பாராட்டை தெரிவித்துள்ளனர்.