பட்டுக்கோட்டை டவுன் அறந்தாங்கி முக்கத்தில் குடிநீர் குழாய் உள்ளது. இந்த குழாய் சில மாதங்களுக்கு முன்பு உடைந்தது. இதனால் இந்த குழாயிலிருந்து குடிநீர் வீணாகிறது. மேலும் தண்ணீிர் தேங்குவதால் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கோடை காலம் வரும் முன்பே உடைந்த குடிநீர் குழாயை சீரமைத்து குடிநீர் வீணாவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளளனர்.
பொதுமக்கள், பட்டுக்கோட்டை