தஞ்சாவூர் மாவட்டம் தொண்டராயன் பாடி கிராமத்தில் கொசு தொல்லை அதிகமாக உள்ளது. தற்போது மழையும் பெய்ததால் மழை தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகிறது. இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர்.கர்ப்பிணிகள்,முதியோர்கள், மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கொசுவை ஒழிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், தொண்டராயன்பாடி