நாய்கள் தொல்லை

Update: 2023-09-27 14:31 GMT


தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகுதியில் தெரு நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. பொதுமக்கள், மாணவ மாணவிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.இரு சக்கர வாகனங்களில் செல்வோரை விரட்டி சென்று நாய்கள் கடித்து விடுகின்றன. மேலும் நிலை தடுமாறி இருசக்கர வாகன ஓட்டிகள் கீழே விழுந்து விபத்தில் சிக்கி விடுகின்றனர்.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தெருநாய்களை பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள் கும்பகோணம்

மேலும் செய்திகள்