கொசுமருந்துஅடிக்கப்படுமா?

Update: 2022-12-07 14:39 GMT


திருவாரூர் மாவட்டம் கோட்டூர் பகுதியில் பல்வேறு இடங்களில் கொசுக்கள் உற்பத்தி அதிக அளவில் உள்ளது. இதனால் டெங்கு, மலேரியா, போன்ற நோய்கள் வர வாய்ப்பு உள்ளது. மேலும் பொதுமக்கள் இரவில் தூங்க முடியாமல் அவதிப்படுகின்றனர். தற்போது பள்ளிகளில் தேர்வு நடைபெற்று வருவதால் மாணவ-மாணவிகள் இரவில் படிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கொசுமருந்து அடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், கோட்டூர்

மேலும் செய்திகள்