கூடுதல் பஸ் இயக்க வேண்டும்

Update: 2022-08-21 15:28 GMT


மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் இருந்து மணல்மேடு கிராமம் வரை பட்டவர்த்தி, திருப்புங்கூர், கற்கோவில், வைத்தீஸ்வரன் கோவில் உள்ளிட்ட ஏராளமான கிராமங்கள் உள்ளன இந்த கிராமங்களில் இருந்து ஏராளமான மாணவர்கள், சீர்காழியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயின்று வருகின்றனர். ஆனால் இவர்களுக்கு போதிய பஸ் வசதி இல்லாததால் பஸ்ஸில் தொங்கிக்கொண்டு செல்ல வேண்டிய நிலை இருந்து வருகிறது. எனவே சம்மந்தப்பட்ட துறையினர் பள்ளி நேரங்களில் கூடுதல் பஸ் இயக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மாணவர்கள், சீர்காழி

மேலும் செய்திகள்