சென்னை புதுப்பேட்டை ராஜரத்தினம் ஸ்டேடியத்திற்கு அருகிலுள்ள தெற்கு கூவம் ஆற்றுச் சாலையில் உள்ள பாதாள சாக்கடை மூடி ஒன்று சேதமடைந்து காணப்படுகிறது. உயிர் கொல்லும் காரணியாக உள்ள இந்த குழியால், பாதசாரிகள், வாகனஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாதாள சாக்கடை மூடியை மாற்றிட உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.