செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஒன்றியத்தில் உள்ள புலியூர் கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இந்த கிராமத்தில் உள்ள பெரும்பாலான சாலைகள் மண்மேடுகளாக காட்சியளிக்கிறது. தார்சாலைகளாக தரம் உயர்த்தப்படாததால் மழைக்காலங்களில் பொதுமக்களால் அந்தவழித்தடத்தை இயல்பாக கடக்கமுடிவதில்லை. எனவே சம்பந்தப்பட்ட துறைசார்ந்த அதிகாரிகள் மண்சாலையை தார்சாலையாக தரம் உயர்த்தப்படவேண்டும்.