கடமலைக்குண்டுவில் இருந்து தேனிக்கு செல்லும் பிரதான சாலையின் இருபுறங்களையும் ஆக்கிரமித்து செடி-கொடிகள் வளர்ந்துள்ளன. இதனால் அந்த சாலை சுருங்கிவிட்டது. இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் வாகனங்கள் நெரிசலில் சிக்கும் சம்பவம் அடிக்கடி நடக்கிறது. எனவே சாலையை ஆக்கிரமித்த செடி-கொடிகளை உடனே வெட்டி அகற்ற வேண்டும்.