கூடலூர் நகராட்சிக்குட்பட்ட பள்ளி பாடியிலிருந்து கோழிப்பாலம் செல்லும் மாநில நெடுஞ்சாலையோரம் சுடுகாடு எதிரே ஆபத்தான பள்ளம் உள்ளது. இதனால் மோட்டார் சைக்கிள் மற்றும் பல்வேறு வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள், சுற்றுலாப் பயணிகள் இரவில் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலை துறையினர் சாலையோரம் உள்ள பள்ளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.