சென்னை அசோக்நகர் பகுதியில் '1-வது அவென்யூ பூங்கா' உள்ளது. இந்த பூங்காவை நடைபயிற்சி மேற்கொள்ள வரும் இளம்வயதினர், வயது முதிர்ந்தோர் என பல தரப்பட்டோர் பயன்படுத்தி வருகிறார்கள். பூங்காவிற்கு வெளியே ஏராளமான குப்பைகள் தேங்கியுள்ளது. இதனால் ஏற்படும் துர்நாற்றம் நடைபயிற்சிக்கு வருபவர்களுக்கு அசவுகரியத்தை ஏற்படுத்துவதோடு, தொற்றுநோய் ஆபத்தையும் விளைவிக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் பூங்காவை சுற்றி தேங்கியுள்ள குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.