திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியத்துக்கு உட்பட்ட மணவூர் ஊராட்சியின் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே மேம்பாலம் ஒன்று உள்ளது. இந்த மேம்பாலத்தை களியனூர் கண்டிகை வழியாக செல்லும் பொதுமக்கள் கடம்பத்தூர், திருவள்ளூர், திருப்பதி, செல்வதற்காக பயன்படுத்துகிறார்கள். ஆனால் இந்த வழித்தடத்தின் பெரும்பாலான பகுதிகளில் தார்சாலை வசதிகள் முறையாக இல்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தார்சாலைகள் அமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.