சென்னை மாநகராட்சி 8-வது மண்டலம், வார்டு 102-ல் பாவேந்தர் பாரதிதாசன் விளையாட்டு திடல் உள்ளது. இந்த திடலில் தினமும் இளைஞர்கள் பலர் விளையாடுகிறார்கள். ஆனால் சமீப நாட்களாக விளையாட்டு திடலின் முன்புறமாக உள்ள சாலையில், சிலர் தங்களது கார்களை சட்ட விரோதமாக பார்க்கிங் செய்துள்ளனர். இதனால் அங்கு விளையாட வருகை தருபவர்கள் சிரமத்துடன் திடலின் உள்ளே செல்கிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட நிர்வாக அதிகாரிகள் சாலையில் ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை அகற்றிட உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.