பஸ் வசதி ஏற்படுத்தப்படுமா?

Update: 2025-12-21 07:13 GMT


திருவள்ளூர் மாவட்டம், அயப்பாக்கம் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தங்கள் பணிகளுக்காக, புறநகர் பகுதிகளுக்கு செல்ல பஸ் போக்குவரத்தையை நம்பி இருக்கிறார்கள். இங்கிருந்து குறைந்த அளவிலான பஸ்கள் இயக்கப்படுவதால் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. குறிப்பாக அயப்பாக்கத்தில் இருந்து கிளாம்பாக்கம், மாதவரம், பூந்தமல்லி ஆகிய பஸ் நிலையங்களுக்கு நேரடியாக பஸ்வசதி இல்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்கள் சிரமத்தை போக்கி, போதிய பஸ்கள் இயக்கப்படவும், மேல் குறிப்பிட்ட இடங்களுக்கு நேரடி பஸ் வசதி ஏற்படுத்திடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்