சென்னை புதுப்பேட்டை டிரைவர் தெருவில் உள்ள ரேஷன் கடை அருகே தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. ரேஷன் பொருட்கள் வாங்க வரும் பொதுமக்களை விரட்டி விரட்டி கடிக்கவரும், நாய்களின் செயல்களால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர். குறிப்பாக தெருவில் செல்லும் மாணவ-மாணவிகளை தெருநாய்கள் குரைத்து துரத்துகின்றன. எனவே மாநகராட்சி துறை அதிகாரிகள் தெருநாய் தொல்லையை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.