திருவள்ளூர் மாவட்டம், ஆவடி மாநகராட்சி மூர்த்தி நகரில் உள்ள மின்மாற்றி ஒன்று எலும்புகூடாக, சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் குடியிருப்புவாசிகள் அச்சத்துடன் வாழ்கிறார்கள். பலமுறை மின்சார வாரியத்திடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்க தயங்குகிறார்கள். மின்விபத்து ஏற்படும் முன்னர் மின்சார வாரிய அதிகாரிகள் அந்த மின்மாற்றியை மாற்றிட வேண்டும்.