நிழற்குடை வேண்டும்

Update: 2022-08-20 14:51 GMT


தஞ்சாவூர் மாவட்டத்தில் புகழ்பெற்ற ஆலயங்களில் ஒன்றான புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி வெளி மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.இந்தநிலையில் புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் பயணிகள் ஏறி இறங்கும் இடத்தில் பயணிகள் நிழற்குடை இல்லை. இதனால் பொதுமக்கள் வெயிலிலும், மழையிலும் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ர.அன்பழகன்,தஞ்சாவூர்

மேலும் செய்திகள்