ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?

Update: 2026-01-18 10:36 GMT

சென்னை வடபழனி முதல் அரும்பாக்கம் 100 அடி சாலையில் திருநகர் பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பஸ் நிறுத்தத்தை தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள நடைபாதை மற்றும் சாலைகள் அதிகளவு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசலும், அவ்வபோது விபத்துகளும் அரங்கேறுகிறது. எனவே, மாநகராட்சி அதிகாரிகள் பஸ் நிறுத்தம் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்