சென்னை சிந்தாதிரிப்பேட்டை, துணை மேயர் கபாலமூர்த்தி சாலை மிகவும் முக்கியமான சாலை ஆகும். இதன் வழியாக தினமும் ஆயிரக்கணக்கனக்கான வாகனங்கள் சென்று வருகிறது. தற்போது இந்த சாலை மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் அவ்வபோது விபத்து ஏற்படுகிறது. எனவே, மாநகராட்சி அதிகாரிகள் சேதமடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.