திருவள்ளூர் மாவட்டம். மணலி புதுநகர் பிரதான மார்க்கெட் சாலை வழியாக நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் மற்றும் பள்ளி செல்லும் குழந்தைகள் சென்று வருகின்றனர். சாலை மிகவும் மோசமாக மேடும் பள்ளமாக இருப்பதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை சாலையை சீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.