திறந்து கிடக்கும் கழிவுநீர் கால்வாய்

Update: 2026-01-18 10:42 GMT

திருவள்ளூர் மாவட்டம், சித்திராஜா கண்டிகை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் டி.என்.எச்.பி. குடியிருப்பு பகுதி உள்ளது. இந்த பகுதியில் உள்ள பிரதான சாலையின் நடுவில் கழிவுநீர் கால்வாய் இருக்கிறது. இந்த கால்வாய் பல நாட்களாக மூடாமல் திறந்த நிலையில் கிடக்கிறது. இந்த வழியாக செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்குகிறது. கழிவுநீர் கால்வாயில் மூடி அமைக்க வேண்டும் என பல முறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் உயிர்சேதம் உள்ளிட்ட அசம்பாவிதங்கள் அரங்கேறுவதற்கு முன்பு, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்