குளம்போல் கழிவுநீர்

Update: 2026-01-18 10:40 GMT

திருவள்ளூர் மாவட்டம், திருமுல்லைவாயல் ஈஸ்வரன் கோவில் தெருவில் ஆயிரக்கணக்கானோர் வசித்து வருகின்றனர். இங்கு உள்ள மண்சாலை குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. அதுமட்டுமின்றி, அந்த பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாயில் இருந்து வெளியேறிய கழிவுநீர் சாலையில் குளம்போல தேங்கி கிடக்கிறது. இதனால் அதிக அளவு துர்நாற்றம் வீசுவதோடு, நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. அந்த சாலை வழியாக யாரும் செல்ல முடியாமல் மிகவும் அவதி அடைகின்றனர். இதுகுறித்து, துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கழிவுநீரை அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்