திருவள்ளூர் மாவட்டம், பெரிய களக்காட்டூரில் அனைத்து மதத்தினரும் பயன்படுத்தும் மயான சுடுகாடு உள்ளது. இந்த சுடுகாடு புதர் மண்டி மிகவும் மோசமாக கிடக்கிறது. அங்கு உள்ள குடிநீர் குழாயில் தண்ணீர் வருவதில்லை. போதிய இடவசதி உள்பட அடிப்படை வசதி முறையாக இல்லாமல் இருக்கிறது. இதுகுறித்து, பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாநகராட்சி அதிகாரிகள் புதர் மண்டி இருக்கும் மயான சுடுகாடை சீரமைத்து, அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.