காஞ்சீபுரம் மாவட்டம், கிழக்கு ராஜ வீதியில் உள்ள மச்சேச பெருமாள் கோவிலின் அருகே குப்பைகள் குவித்து வைக்கப்பட்டிருந்தது. இதனால் அந்த பகுதியின் சுகாதாரம் கேள்விக்குறியாகியது. பக்தர்கள் மூக்கை கைக்குட்டையால் மூடி செல்லும் அளவிற்கு மோசமாக நிலை உருவாகியிருந்தது. இதுகுறித்து 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியானது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து குப்பைகளை அப்புறப்படுத்தினர். உடனடியாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், துணை நின்ற ‘தினத்தந்தி‘-க்கும் அப்பகுதி பொதுமக்கள் பாராட்டை தெரிவித்துள்ளனர்.